| |
பாம்பனார் பணி மன்றம், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துகளைப் பரப்பும் உயரிய நோக்குடன் செயல்பட்டு வருகின்றது.
பாம்பனார் பணி மன்றம் 1999 ஆம் ஆண்டு, ஜூன் மாதம், தேனமர் சோலை தேனாம்பேட்டை பாலசுப்ரமணியர் ஆலயத்தில், பல ஆன்றோர்கள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
செயலாளராக வீ. கலைச்செல்வன் அவர்களும், அமைப்பாளராக வீ. ராமதாஸ் அவர்களும் செயல்பட்டு, இம் மன்றத்தை நடத்தி வருகின்றனர். பாம்பனாரின் அருள் நெறி கருத்துகளைப் பரப்புகிற சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள், சென்னையில் உள்ள திருக்கோயில்களில், பணி மன்றத்தின் மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இது வரை சுமார் 300 பேர் கௌரவித்து சிறப்பிக்கபட்டுள்ளனர்.
பாம்பனார் பணிமன்றத்தின் கொள்கைகள்:
1. ஐம்முகச் சிவமே அறு முகச் சிவம்
2. சிவம் சக்தி முருகன் கணபதி - ஒருவரே!
3. கொல்லாமை நெறி கடைப் பிடித்தல் வேண்டும்
4.சைவப் பெரியார்கள் நால்வர், தாயுமானவர், பட்டினத்தடிகள், அருணகிரியார், பாம்பன் ஸ்வாமிகள் - பாடல்களை உணர்தல்
5. அறு முகச் சிவம் அனைத்தையும் நல்கும்
6. அறு முகச் சிவம் - தமிழ்க் கடவுள் அல்ல; எல்லா மொழிகளுக்கும் கடவுள்
அறு முகச் சிவம் - கலியுக தெய்வம் அல்ல; எல்லா யுகத்திற்கும் தெய்வம். |